Sunday, January 29, 2012

மீள்பதிவு ( ஏமாற்றங்கள் தொடர்வதால்)


ஏ(ன் இந்த)மாற்றம்

1.  எல்லோரும் போல ஓடி ஆடி விளையாட ஆசை (சிறு வயதில்) கால் சிறு ஊனமாய் ஏ(ன் இந்த)மாற்றம்?
2. பொறிஞராய் ஆக படித்தேன் 11 ஆம் வகுப்பு வரை கல்லூரியிலோ கிடைத்தது மருத்துவத்துறை ஏ(ன் இந்த)மாற்றம்?
3. வேலை தேடலில் மனதுக்குப்பிடித்த தொழில் நுட்ப வல்லுனராய் ஆனால் கிடைத்தது அடிமைத்தனமாய் ஏ(ன் இந்த)மாற்றம்?
4. திருமணவாழ்க்கையில் மனதுக்கு பிடித்த மணைவி(என்மனம் புரிந்தவளாய்) ஆனால் கிடைத்தது வாழ்க்கை அவள் மனம் புரிந்தவனாய்ஏ(ன் இந்த)மாற்றம்?
5. மகன்(ள்)களுக்கு நல்ல வாழ்க்கை அமைய காத்திருக்கிறேன் .............?

இன்னும் எவ்வளவோ மனதில் ஏ(ன் இந்த)மாற்றங்களுடன்.............

என் சிறுவயது முதலே என் மனதினில்
முதல் வரி வேரூன்றி வந்தது
வெளிப்படுத்த நேரம் வந்தது
தற்போது....

-கன்னையன் மணி

Friday, January 27, 2012

நிலாக்காதலியை...


எட்டி பார்த்தது நிலவு


நிலவே!!!

சூரியனிடம்
அப்படியென்ன
ஓடிபிடித்து
விளையாட்டு
நிலவே!
ஓரிடத்தில்
நின்று பிரகாசிக்க
உன் சூரியக்
குடும்பத்தில்
உனை 
வைவாரில்லையோ?
வண்ணநிலவே...

Thursday, January 26, 2012

சுதந்திரமா(ய்)?


சுதந்திரத்திற்காக அந்நாளில்
என்ன காரணுத்துக்காக பாடுபட்டார்களோ
அது அனைத்தும் வீணென்பர்
இன்றைய சூழல் கண்டு…
மற்றவர் கட்டுப்பாட்டில் இருந்தபோது
கட்டுப்பட்டு ஒன்றாய் சுதந்திரம் வேண்டுமென….
ஒற்றுமையாய் ஆனால், கிடைத்தபின்
ஒருவர்க்கொருவர் ஒற்றுமையின்றி
நாகரீகம் என்ற போர்வைக்குள்
நாகரீகமற்று…. இயற்க்கைகூட
எதிரியாய், பருவம் மாறிடக்கண்டு என் நெஞ்சம்
பதைக்கின்றதே….
அரசியல்வாதிகளின் சுயாட்சி சூழலின் சதி
சுயநலவாதிகளின் சூழ்நிலைக்கொண்டாட்டம்
அற்பர்களின் ஆணவ ஆரவாட்டம் எனப் பலப்பல
அய்யகோ மீண்டும் சுதந்திரம்
சுதந்திரமாய் நடமாடுவதெப்போது?
உண்மை சுதந்திரம் கிடைப்பதெப்போது?

Monday, January 23, 2012

பொதுவாய்

அவள் சுகமாய் (குழந்தையாய்)
அவள் அவளாய் (பருவப்பெண்ணாய்)
அவள் அவனுக்காய்(மணப்பெண்ணாய்)
அவள் அவளாகி(தாய்மையாய்)
அவள் நூலாகிப் போனாள்(முதுமையில்)
எத்தனை அவதாரம் அப்பப்பா....
ஆனாலும் மாமியார் அவதாரம் எடுக்கும் போது
மட்டும் ஏன் அவள் அவளுக்கு எதிரியாய்?

Friday, January 6, 2012

சிந்தனை எதிரொலி


சிந்தனை செய் மனமே
நிந்தனை செய்யாதிருக்க
வந்தனை செய்குவோம்
எந்தனை நல்வழி நடத்திட..

காலத்தின் கட்டாயம்
காத்திருப்போர் ஏராளம்
சூது இல்லா
மாது வேண்டி

கிடைத்தற்கரிய மானுட ஜென்மம்
கிடைத்தது கண்டு பெருமைப் படு மனிதா
நற்சிந்தனை, மற்றுயிர்மீது அன்பு
நமையன்றி வேறு
உயிர்க்குண்டோ இப்பேறு
என அறை கூவல் கூறு
மாற்றியமைத்திட்டோம் பாரு
என்றே மற்றவர் வியந்திடக் கூறு
வருவது வரட்டும் துனிவுடன் முன்னேறு
தருவது தரட்டும் பனிவுடன் ஏற்று… 

Thursday, January 5, 2012

என் மனதில்

காதலுக்கு கண் இல்லை என்றால் எப்படி
கண்ணும் கண்ணும் கலந்து உணர்வு பரிமாற்றம்
நடந்ததால்தானே காதல் வந்தது


காதலியை மட்டும் காதலியுங்கள்,
மற்றவர்களை காதலின் மற்றொரு அவதாரமான நேசியுங்கள்.


துணிந்து செயல்படுங்கள் 
துன்பந்தனை எதிர்த்துப் போரடுங்கள்
கரடு முரடானப் பாதை கூட மலர்பாதையாகும்
வெற்றிக் கனிப் பறிக்க....



பிறப்பு

பிறப்பு ஒரு முறை
இறப்பு ஒரு முறை
இடையினில் ஆட்டம்
வாழ்க்கையின் ஓட்டம்
வாழ்ந்து பார்ப்போம் மனிதனாய்
வாழ வைப்போம் தெய்வமாய்
வாழ்வின் கால அவகாசம் தெரியாது
அதற்க்குள் செய்வதை செய்து முடி
செய்தவை, செய்வதை திருந்த செய்
பலனேதும் எதிர் பாராமல்.